About Us
Child Sexual Abuse
Services & Programs
Resources
FAQ
Downloads
Links
Contact Us
  குழந்தை பாலியல் கொடும | கொடுமை இழைப்போர | குழந்தைகளை ஆயத்தப்படுத்தல | அறிகுறிகள்  மற்றும் மாற்றங்கள  

·         குழந்தைகளுக்குக் கொடுமை இழைப்பவர்கள் கெட்ட நடவடிக்கையுள்ள அச்சமூட்டும் அன்னியர்களாக இருப்பார்கள் என்றே பலரும் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். . உண்மையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தையின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ, நண்பர்களாகவோ, தெரிந்தவர்களாகவோ, குழந்தையின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவோதான் இருப்பார்கள். முற்றிலும் அன்னியர்களாக இருப்பது அபூர்வம் தான்.

·         பலரும் நினைக்கிறமாதிரி குழந்தைகளுக்குக் கொடுமை இழைப்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. எந்த விதத்திலும் அவர்கள் மற்ற சாதாரண நபர்களிலிருந்து வேறுபட்டிருக்கமாட்டார்கள். உண்மையில் அவர்கள் ஓரு சராசரியான வாழ்க்கையை நடத்தும் சாதாரண நபர்களாகவும், குழந்தைகளுக்குத் தெரிந்தவர்களாகவும் தான் இருப்பார்கள். ஆனால் குழந்தைகளோடு உடல் உறவுகொள்வது பற்றித் தயக்கம் காட்டவோ, மனசாட்சியால் உறுத்தப்படவோ மாட்டார்கள்.

மேலும், குழந்தைகளுக்குப் பாலியல் கொடுமை இழைப்பவர்களுக்கென்று எந்தவிதமான பொதுவான இயல்புகளும் இருப்பதில்லை.

·                 பெரும்பாலும் ஆண்களே இதில் ஈடுபடுகிறார்கள்; எனினும் பெண்களும் எப்போதாவது     ஈடுபடுவதுண்டு.

·                 அவர்கள் எந்தக் குறிப்பிட்ட  சமூக பொருளாதாரப் பிரிவையும் சேர்ந்தவர்களல்ல.

·                 கல்வி பெற்றிருத்தலோ அல்லது பெறாமல் இருந்தாலோ ஓரு பாலியல் கொடுமை செய்பவரை வரையறை செய்வதில்லை

·                 அவர்களுக்கு  உளவியல் மற்றும் உணர்ச்சி சார்ந்த  பிரச்சினை எதுவும் இருக்க வேண்டியதில்லை.

·                 அவர்கள் மணமானவர்களாகவும் சொந்தக் குழந்தைகள் உள்ளவர்களாகவும் இருக்கலாம்.

·                 அவர்கள்  தமது குழந்தைப் பருவத்தில் பாலியல் பாதிப்புக்கு ஆளாகியிருக்கலாம்,  இல்லது அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம்.

பாலியல் கொடுமையாளர்கள்  ஏதாவது ஒருப்பிட்ட குழந்தையைக் குறிவைக்கும்போது கீழ்க்கண்ட அம்சங்களைப் மனதில் வைத்துக் கொள்கின்றார்கள்:

·                 எந்த வித இடையூறும் இல்லாமல்  பயன்படுத்திக்கொள்ளப் படக் கூடிய ஓரு குழந்தையைத்   தேர்ந்தெடுத்தல் முடியுமா என்று பார்த்தல்.

·                 சிறிது காலம் குழந்தையையும் அதன் பழக்கவழக்கங்களையும்  கவனித்துவிட்டு, தந்திரமாகப் பாலியல் நடவடிக்கைகளில்  ஈடுபடுத்தி, அந்தக் குழந்தை தானே விரும்பி அதில் ஈடுபடுவதுபோல எண்ணச் செய்தல்.

·                 தன் விருப்பத்துக்கு  இணங்கி வரக்கூடும் என்று தான் கருதும் ஓரு குழந்தையை ஆசைகாட்டியோ, பொருள் கொடுத்தோ, நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கியோ, அச்சமூட்டியோ, வேவு பார்த்தோ இணங்க வைத்தல்.

 

Top