About Us
Child Sexual Abuse
Services & Programs
Resources
FAQ
Downloads
Links
Contact Us
ts§fŸ              

 
   
 

A Parent’s Practical Response to Child Sexual Abuse

 
குழந்தை பாலியல் கொடுமை பற்றி பெற்றோருக்கு ஏற்படும் கவலைகளைப் போக்குவதற்கு இந்தப் புத்தகம் முயற்சி செய்கிறது. அவர்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பில் பங்கேற்பதற்குத் தேவையான விவரங்களையும் வழங்குகிறது. அதோடு மட்டுமின்றி அதைப் பற்றிக் குழந்தைகளிடம் பேசுவதற்கு ஆலோசனை வழங்குகிறது. மேலும், குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ தெரியவந்தாலோ எப்படிச் செயல்படவேண்டும் என்பது பற்றியும் ஆலோசனை வழங்குகிறது. சுய பாதுகாப்பு விதிகளைப் பற்றிக் குழந்தைகளிடம் எப்படி எடுத்துக்கூறுவது என்பது குறித்த யோசனைகளும் இந்தப் புத்தகத்தின் முக்கிய அம்சம் ஆகும்.
  Top
   
குழந்தை பாலியல் கொடுமைக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள போரில் பள்ளிகளின் பங்கு மிக முக்கியமானது. குழந்தை தான் விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பகுதியைப் பள்ளியில் கழிப்பதாலும் குழந்தைகளை அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்பையும் அவர்களிடம் ஏற்படும் மாறுதல்களைக் கண்டுணரும் திறனையும் ஆசிரியர்கள் பெற்றிருப்பதாலும், குழந்தை பாலியல் கொடுமையைத் தடுக்கும் இணையற்ற வாய்ப்பைப் பள்ளிகள் பெற்றுள்ளன. இதைத் துளிர் நன்றாகவே உணர்ந்துள்ளது. எனவே, குழந்தை பாலியல் கொடுமையை எதிர்க்கத் தேவையான தகவல்களையும் அதிகாரத்தையும் பள்ளிகளுக்கு வழங்கவும், இதுப் பற்றிய தமது பங்கையும் பொறுப்பையும் உணர்ந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் பள்ளிகள் அக்கறையோடு செயல்பட வேண்டும் என்பதற்காகவும் இந்தக் கையேட்டைத் துளிர் வடிவமைத்துள்ளது.
  Top
என் பாதுகாப்பு - பயிற்சிப் புத்தகம்
துளிர் வடிவமைத்துள்ள மற்றுமொரு ஆதார வளம் இது. நம் உடல் நமக்கே சொந்தம் என்ற கருத்தையும் தமது சுய பாதுகாப்புப் பற்றியும் ஆரம்பப் பள்ளிக்குழந்தைகளுக்கு இந்தப் புத்தகம் எடுத்துக் கூறுகிறது. குழந்தை பாலியல் கொடுமையைத் தடுக்கவும், கொடுமைக்கு ஆளான குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கவும் இந்தப் புத்தகம் பயன்படுகிறது.
  Top
  குழந்தை பாலியல் கொடுமையைத் தடுப்பது மற்றும் குணமளிப்பது - தேவாலயங்களுக்கான விவிலியத்தை அடிப்படையாகக்கொண்ட ஞாயிறு பள்ளிப் பாடத்திட்டம்  

பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த குழந்தை பாலியல் கொடுமை தடுப்பு மற்றும் குணமளிக்கும் மையத்தால் வடிவமைக்கப்பட்ட நூல் இது. பைபிள் போதனைகள், கதைகள் மற்றும் இறை பாடல்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சமயம் சார்ந்த ஆதார வளம் இது. குழந்தை பாலியல் கொடுமை தடுப்பு மற்றும் கொடுமைக்காளான குழந்தைகளுக்கு ஆதரவு தருவது போன்ற கருத்துக்களை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஞாயிறு பள்ளிப் பாடத்திட்டத்தில் பயன்படுத்த உகந்தது.
  Top
 
  ஒவ்வொரு குழந்தையும் முக்கியமில்லையா? சென்னைப் பள்ளிக்குழந்தைகளிடையில் பாலியல் கொடுமை  மற்றும் அதன் வீச்சையும்   பற்றிய ஆய்வு.  

சென்னையில் உள்ள 24 பள்ளிகளில், 2211 மாணவ-மாணவியரிடைய நடத்தப்பட்ட ஆய்வின் பலனாக இந்த வெளியீடு அமைந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் இந்தச் சமூகத்தை நம் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழும் ஒரு இடமாக மாற்ற நாம் பூண்டுள்ள முடிவை மீண்டும் வலியுறுத்தி ஒன்று கூடிப்பாடுபடவேண்டும் என்ற உண்மையை உறுதிப்படுத்துகிறது. (இன்னும்.....)

 

 
  Top
 
  செய்தி, தகவல், கல்வி வளங்கள் (ICE Resources)  

அச்சு மற்றும் கூட்டு ஊடகச் செய்தி, தகவல், கல்வி வளங்களை துளிர் உருவாக்கி வெளியிடுகிறது. சுவரொட்டிகள், கையேடுகள், துண்டுப் பிரசுங்கள், அனிமேஷன் படங்கள், ஒலிப்பேழைப் புத்தகங்கள் போன்றவை. இந்தச் சாதனங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் கிடைக்கின்றன. (இன்னும்...)

 
 
  Top