துளிர்- குழந்தை பாலியல் கொடுமை
தடுப்பு மற்றும் குணப்படுத்தும் மையம் குழந்தைகளுக்கு
இழைக்கப்படும் பாலியல் கொடுமைக்கு எதிராகச் செயல்படுவதற்காகத்
தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பதிவுபெற்ற அரசு சாரா தொண்டு
நிறுவனமாகும்.
ஒரு சமூகத்தின் மதிப்பும் குணமும் அதில் உள்ள குழந்தை பாலியல்
கொடுமைக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையால் நிர்ணயிக்கப்படுவதில்லை.
(பரவலான கருத்துக்கு மாறாக குழந்தை பாலியல் கொடுமை
நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதை ஒத்துக்கொள்வதால்
ஏற்படக்கூடிய அசௌகரியம் மற்றும் பல்வேறு காரணங்களால் அது
மௌனமாக நடந்து வருவது வருத்தத்தை அளிக்கிறது. அதைத்
தடுப்பதற்காகத் தக்க சமயத்தில் எடுக்கப்படும் சரியான
நடவடிக்கைகளால்தான் ஒரு சமூகத்தின் மதிப்பு
நிர்ணயிக்கப்படுகிறது என்று துளிர் நம்புகிறது.
இப்படி ஒரு பிரச்சினை நிலவுவதை இந்தச் சமூகம் ஒத்துக்கொண்டு தன்
குழந்தைகள் தன்னுடைய கவனிப்பாலும் முன்னோக்கினாலும்
பயன்பெறவேண்டும் என்றும் எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறோம்
என்று உணரும் உரிமையைப் பெறவேண்டும் என்றும் செயலாற்றவேண்டும்
என்று துளிர் நம்புகிறது.
இந்தியாவில் குழந்தை பாலியல் கொடுமை என்ற ஒன்று நிகழ்ந்து
கொண்டிருப்பதை நாம் இப்போதுதான் ஒத்துக்கொள்ளத் துவங்கியுள்ளோம்.
ஆயினும் விரைவிலேயே இதைப் பற்றியும் இதனால் ஏற்படும்
விளைவுகளின் குறிப்பிடத்தக்க தாக்கத்தைப் பற்றியும் ( உடலியல்,
சமூக மற்றும் சுகாதார இழப்புகள்) இந்தச் சமூகம் தெரிந்துகொண்டு
இது ஒரு முக்கியமான தடுக்கப்பட வேண்டிய சமூக சுகாதார விவகாரம்
என்பதையும் உணர்ந்து செயல்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை
என்பதில் துளிர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறது.
இது ஒரு நெடுந்தூரப் பயணம். இப்படி ஒத்துக்கொள்வதிலிருந்து
இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இதை
எதிர்கொள்ளத் தேவையான பயிற்சியைத் தந்து அவர்களுக்கு
வலுவூட்டுவது வரையிலான பயணம். இந்தப் பிரச்சினையைச்
சூழ்ந்துள்ள மௌனத்தைக் கலைக்க இந்த இணையதளம் உதவுகிறது இது ஒரு
தகவல் மையமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எந்தச் சமயத்திலும்
பாதுகாப்பாக உணரும் உரிமையைக் குழந்தைகள் பெறவேண்டும்
என்பதற்காக, அப்படிப்பட்ட ஒரு உலகை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள
நிறுவனங்களையும் தனிமனிதர்களையும் இணைக்கும் பாலமாகவும்
அவர்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்த உதவும் கூட்டமைப்பாகவும்
செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
|