|
4 FHªij ghÈaš bfhLikia¥ g‰¿ eh‹ V‹ bjǪJbfhŸsnt©L«?
4 FHªij ghÈaš bfhLik nk‰f¤âa ehLfËš k£Lnk el¡»wJ v‹W Ãid¤njnd......
4k¡fŸ FHªijfis¥ ghÈaš bfhLif¡F c£gL¤JtJ vjdhš?
4ïªj¡ bfhLif¡F c£gL« mgha« všyh FHªijfS¡F k£L« mâfkhf ïU¡»wjh?
4áWt®, áWÄa® - ïUghyU« rk msÉš ïªj mgha¤J¡F cŸsh»wh®fsh?
4clš âw‹ FiwghLŸs FHªijfS¡F ghÈaš bfhLik¡F c£gL¤j¥gL»wh®fsh?
4j§fS¡F ïiH¡f¥g£l ghÈaš bfhLikia¥ g‰¿ FHªijfŸ V‹ ahÇlK« brhštâšiy?
4v¥go¥g£l kÅj®fŸ FHªijfS¡F¥ ghÈaš bfhLikia ïiH¥gh®fŸ?
4bfhLik ïiH¥gt®fŸ mJngh‹w brašfËš <Lglhkš ïU¡f¢ brŒaKoíkh?
4bfhLikÆiH¥gt®fis ek¡F milahs« fh£l¡Toa Kiwa‰w elto¡iffŸ v‹bd‹d?
4 ïJngh‹w brašfËš <LgL« bgÇat®fŸ mšyJ bgÇa FHªijfis Ú§fŸ gh®¤âU¡»Ö®fsh?
4 ghÈaš F‰wÄiH¥gt®fËl« ïUªJ e« FHªijfis¥ ghJfh¥ghf it¤J¡ bfhŸtJ v¥go?
4xU FHªij ghÈaš bfhLik¡F Msh»íŸsJ v‹gJ vd¡F¤ bjÇatªjhš eh‹ v‹d brŒant©L«? v¥go¢ brayh‰w nt©L«? v‹d brhšy nt©L«?
4ghÈaš bfhLikÆÈUªJ Fz«bgw Koíkh?
குழந்தை
பாலியல்
கொடுமையைப்
பற்றி
நான்
ஏன்
தெரிந்துகொள்ளவேண்டும்? |
நமக்குத் தெரிந்த எந்தக் குழந்தையும் பாலியல்
கொடுமைக்கு உட்படுத்தலாம் என்பதை நாம் முதலில்
தெரிந்துகொள்ளவேண்டும். அவர்களுடைய பாதுகாப்புதான்
பெரியவர்களாகிய நம்முடைய தலையாய அக்கறையும் பொறுப்பும் என்பதை
நாம் உணரவேண்டும். ஆயினும், எப்போதும் அருகிலேயே இருந்து
அவர்களைப் பாதுகாப்பது என்பது நடக்ககூடிய காரியமில்லை. எனவே
தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதைக்
குழந்தைகளுக்கு உடனடியாக எடுத்துச் சொல்வது இன்றியமையாததாகிறது.
குழந்தைகள் நம்மோடு மனம்விட்டுப் பேச சந்தர்ப்பம் அமைத்துக்
கொடுப்பது பெரியவர்களாகிய நம்முடைய கடமையாகும். நம்முடைய
குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரிடம் (teen-agers)முறையற்ற
பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைப் பற்றித் தெரிந்து
கொள்ளவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறியவும், அத்தகைய
சூழலில் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியும்
தெரிந்துகொள்ளவேண்டியது நம்முடைய பொறுப்பாகும். ஒரு குழந்தை
பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படும்போது எப்படிச் செயல்பட
வேண்டும் என்று எல்லாப் பெரியவர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.
|
|
குழந்தை பாலியல் கொடுமை மேற்கத்திய நாடுகளில்
மட்டுமே நடக்கிறது என்று நினைத்தேனே...... |
இது பரவலாக உள்ள ஒரு தவறான கருத்து. குழந்தை
பாலியல் கொடுமை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளைப்
பாதிக்கும் ஒரு பொதுப் பிரச்சினை. எல்லா இடங்களிலும் குழந்தை
பாலியல் கொடுமை இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் தான் அதைப்
பற்றிய செய்தியும் தகவலும் அதிகமாக வெளியிடப்படுகிறது. குழந்தை
பாலியல் கொடுமை எல்லா இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது
என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 1999-ஆம் ஆண்டில் உலக
சுகாதார அமைப்பான WHO வெளியிட்டுள்ள அறிக்கையில் 10-ல் ஒரு
குழந்தை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுவதாக
குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்துவரும் குழந்தை
பாலியல் கொடுமை பற்றி விரிவான விவரங்கள் இல்லை, எனினும், இந்தத்
துறையில் நடத்தப்பட்ட சில முக்கிய ஆய்வுகளின் முடிவுகள்
நமக்குச் சில தகவல்களைத் தருகின்றன.
·
இந்தியாவில்
நிகழும்
குழந்தை
பாலியல்
கொடுமை
பற்றி
சில
புள்ளிவிவரங்கள்
:
·
2006-ஆம்
ஆண்டு
சென்னையில்
2211
பள்ளி
செல்லும்
சிறுவர்களிடையே
துளிர்-CPHCSAவால்
நிகழ்த்தப்பட்ட
ஆய்வில்,
42%
குழந்தைகள்
குழந்தை
பாலியல்
கொடுமைக்கு
ஆளாகியிருப்பது
தெரியவந்தது.
சமூகத்தின்
எல்லா
நிலையைச்
சேர்ந்த
குழந்தைகளும்
(ஏழை-பணக்காரர்
வித்தியாசமின்றி)
இக்கொடுமைக்கு
உட்படுத்தப்பட்டிருந்ததும்
தெரியவந்தது.
சிறுவர்களில்
48%தினரும்
சிறுமியரில்
39%தினரும்
கொடுமைக்கு
உட்படுத்தப்பட்டதாகத்
தெரிவித்திருந்தனர்.
அவர்களில்
15%தினர்
கடுமையான
கொடுமைக்கு
ஆளாகியிருந்தனர்.
·
1997-ஆம்
ஆண்டு
புதுடெல்லியில்
சாக்ஷி
என்ற
அமைப்பு
350
பள்ளிச்
சிறுமியரிடையே
நடத்திய
மதிப்பீட்டில்
63%தினர்
நெருங்கிய
குடும்ப
உறுப்பினர்களால்
குழந்தை
பாலியல்
கொடுமைக்கு
ஆளாகியிருந்தது
தெரியவந்தது.
அவர்களில்
25%
சிறுமியர்
பலாத்காரம்,
அல்லது
வாய்வழி
உடலுறவுக்கு
Oral Sex)
உட்படுத்தப்பட்டிருந்தது
தெரியவந்தது.
·
1997-ஆம்
ஆண்டு
சென்னை,
மும்பை,
டெல்லி,
கொல்கத்தா
மற்றும்
கோவாவைச்
சேர்ந்த
நடுத்தர
மற்றும்
உயர்மட்ட
வகுப்பைச்
சேர்ந்த
பெண்களிடையே
RAHI
-யால்
நடத்தப்பட்ட
மற்றொரு
ஆய்வில்,
பங்கு
கொண்டவர்களில்
76%தினர்
குழந்தைகளாக
இருக்கும்போது
பாலியல்
கொடுமைக்கு
ஆளாகியிருந்தார்கள்
என்பதும்
அவர்களில்
71%தினர்
நெருங்கிய
உறவினர்
அல்லது
நம்பிக்கைக்குரிய
நபரால்
கொடுமைக்கு
உட்படுத்தப்பட்டிருந்தனர்
என்பதும்
தெரியவந்தது.
·
1996-ல்
பெங்களூரில்
சம்வாதா
என்ற
அமைப்பு
மாணவர்களிடையே
நடத்திய
ஆய்வில்
47%தினர்
பாலியல்
கொடுமைக்கு
ஆளாகியிருந்தது
தெரியவந்தது.
62%தினர்
ஒரு
முறையாவது
பலாத்காரப்படுத்தப்பட்டிருந்தாலும்,
38%தினர்
தொடர்ச்சியாக
பாலியல்
கொடுமையின்
மூலம்
துன்பத்தை
அனுபவித்தார்கள்
என்பதும்
தெரியவந்தது.
மக்கள் ஏன் குழந்தைகளைப் பாலியல் கொடுமைக்கு
உட்படுத்துகின்றார்கள்?
|
·
குழந்தைகளைப்
பாலியல்
கொடுமைக்கு
உட்படுத்துபவர்கள்
குழந்தைகளிடம்
பாலியல்
ஈர்ப்பைக்
கொண்டவர்களாகவோ,
பீடோபைல்
ஆகவோ
(Pedophiles)
சைல்ட்
மொலடர்
ஆகவோ
(Child molesters)
இருக்கலாம்.
குழந்தைகளைக்
கொடுமைப்படுத்துவதற்கு
பல
காரணங்கள்
இருக்கலாம்.
பீடோபைல்
(Pedophiles)
எனப்படுபவர்கள்
குழந்தைகளிடம்
மட்டுமே
பாலியல்
ஈர்ப்பைக்
கொண்டிருப்பார்கள்.
ஆனால்
(Child molesters)
எனப்படுபவர்கள்
பெரியவர்களுடன்
சாதாரணமான
பாலியல்
உறவுகளைக்
கொண்டிருக்கும்போதே
குழந்தைகளுடனும்
பாலியல்
உறவு
கொள்வதில்
தயக்கம்
காட்டுவதில்லை.
(இன்னும்...) |
|
|
|
இந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்படும் அபாயம் சில
குழந்தைகளுக்கு மட்டும் அதிகமாக இருக்கிறதா?
• கொடுமைக்கு உட்படுத்தப்படும் அபாயம் எல்லாக்
குழந்தைகளுக்கும் பொதுவாகவே உள்ளது என்றாலும், குறிப்பிட்ட சில
காரணிகள் இந்த அபாயம் ஏற்படும் சாத்தியத்தை அதிகப்படுத்துகின்றன.
• அதிகாரம் கொண்டவர்களிடம் எதிர்கேள்வி கேட்காமல் கீழ்ப்படிந்து
நடப்பதுதான் மரியாதை என்ற எண்ணம்.
• முறையான பாலியல் கல்வி இல்லாமை -- பாலியல் செய்கைகளைக் குறிக்கும்
சொற்கள் அல்லது தொடுதல் குறித்த வரைமுறைகளைப் பற்றிய போதுமான
தகவல்கள் இல்லாதிருத்தல்.
• கலாச்சார கட்டுப்பாடுகள் அல்லது தர்மசங்கடம் இவற்றினால்
பெரியவர்கள் குழந்தைகளுக்கு முறையான பாலியல் உறவுகள் பற்றிச்
சொல்லித் தராமல் இருத்தல்.
• பெரியவர்களைவிடத் தாழ்ந்த நிலையையே குழந்தைகளுக்கு வழங்கும் சமூக
அமைப்பு.
• நிபந்தனைகளற்ற அன்பை வழங்கும், எவரையும் எளிதில் நம்பிவிடும்
குழந்தைகளின் இயல்பான மனப்பாங்கு.
• எல்லோரையும் திருப்திப்படுத்தவேண்டும் என்ற ஆசை
• குடும்ப கௌரவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று
வலியுறுத்தப்படுவது.
• உடல் திறன் குறைவு
• சரியற்ற, ஒழுங்கற்ற குடும்பச் சூழ்நிலை
• குழந்தை தன்னைப் பற்றித் தாழ்வாக நினைப்பது.
• குழந்தை மிகச் சில நண்பர்களையே கொண்டிருத்தல்/ தனிமையில் இருத்தல்.
|
|
|
சிறுவர்,
சிறுமியர் - இருபாலரும் சம அளவில் இந்த அபாயத்துக்கு
உள்ளாகிறார்களா?
ஆம்,
சிறுவர் சிறுமியர் இரு பாலருமே சம அளவில் தான் இந்த அபாயத்துக்கு
உள்ளாகிறார்கள். குழந்தை பாலியல் கொடுமையைப் பற்றிய பல அறிக்கைகள்
பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சிறுமியரைப் பற்றி மட்டுமே தகவல்களைத்
தருகிற காரணத்தால்,
சிறுவர்களை விட அதிக அளவில் சிறுமியரே இந்தக் கொடுமைக்கு
உட்படுத்தப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பாலியல் கொடுமையைப் பற்றிச் சிறுவர்கள் வேறுவிதமாகத்
தெரிவிக்கிறார்கள் என்று ஆய்வுகள் அறிவிக்கின்றன. ஒன்று,
நிகழ்த்தப்பட்ட கொடுமையைத் திட்டவட்டமாக மறுக்கிறார்கள் அல்லது அதை
ரசித்ததுபோல் நடிக்கிறார்கள். நமக்குத் தெரியவந்துள்ளதைக்
காட்டிலும் அதிக எண்ணிக்கையில் சிறுவர்கள் கொடுமைக்கு
உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
கொடுமைக்கு உட்படுத்தப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையைப் பற்றித்
தெளிவாகத் தெரிந்துகொள்வதற்கு மேலும் பல ஆய்வுகளை நடத்தவேண்டியது
அவசியம்.
|
|
|
உடல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளும் பாலியல் கொடுமைக்கு
உட்படுத்தப்படுகிறார்களா?
உலக
அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் உடல்திறன் குறைபாடுகள் இல்லாத
குழந்தைகளைவிட உடல்திறன் குறைபாடுகளுடைய குழந்தைகள் 3.4 மடங்கு வரை
அதிகமாகப் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று
தெரிவிக்கின்றன. ஒரு குழந்தை உடல்திறன் குறைபாடுகளைக் கொண்டு
இருந்தால் அது பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படும் அபாயம் இரண்டு
மடங்கு அதிகரிப்பதாக வேறு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (Child
Abuse & Neglect, Feb 2005 & March 2004) இந்தியாவில் உள்ள
உடல்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 12 கோடி என்ற தகவலும்,
இந்தக் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம்
என்ற சாத்தியக்கூறும் நம்மைப் பீதியடையச் செய்கின்றன. குழந்தை
பாலியல் கொடுமையை இந்தச் சமூகம் நிராகரிப்பதும், குழந்தைகள்,
அதிலும் குறிப்பாக, உடல்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் பால் உணர்வு
இல்லாதவர்கள் என்று கருதப்படுவதால் பாலியல் சம்பந்தப்பட்ட தகவல்களை
அவர்களுக்கு நாம் கொடுப்பதில்லை என்பதும் இந்தப் பிரச்சினையின்
தீவிரத்தைப் பல மடங்கு அதிகப்படுத்துகிறது.
கொடுமை இழைப்பவர்கள் உடல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளை
அழகற்றவர்களாக நினைக்கிறார்கள், அவர்களுக்காகப் பரிதாப்படுகிறார்கள்.
எனவே, உடல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளை அவர்கள் ஏதும் செய்வதில்லை
போன்ற கட்டுக்கதைகளும் பரவலாக உள்ளன.
|
|
|
தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையைப்
பற்றி குழந்தைகள் ஏன் யாரிடமும் சொல்வதில்லை?
ஒரு சிறிய சதவீத அளவிளான குழந்தைகள் கொடுமை நிகழும்
பொழுது
அது
பற்றி வெளியே சொன்னாலும் குழந்தை பாலியல் கொடுமையைப் பற்றி வெளியே
சொல்வதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைப் பற்றிய அச்சங்களால்
பெரும்பான்மையான குழந்தைகள் மௌனமாக இருந்து விடுகிறார்கள் அல்லது
வெளியே சொல்லத் தயங்குகிறார்கள்.
இந்த அச்சங்கள் பின் வருமாறு
ஞாபகம் வைத்துக் கொள்வதில் அச்சம்
பாலியல் கொடுமை இழைக்கப்பட்ட குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்ட
அனுபவத்தை மனதுள் ஆழப் புதைத்து அதைப் பற்றி முற்றிலும்
மறந்துவிடுவதன் மூலம் மனதில் ஏற்பட்ட காயத்தை ஆற்றிக் கொள்ளவும்
மறுபடி வேதனையை உணராமல்
இருக்கவும் நிலைமையைச் சமாளிக்க முற்படுகிறார்கள்.
அன்பை இழந்துவிடுவதில் அச்சம்
கொடுமைக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர் தாங்கள்
அசுத்தமாகிவிட்டதாக எண்ணுகிறார்கள். பல சமயங்களில் தங்களுக்கு
இழைக்கப்பட்ட கொடுமைக்கு எவ்வகையிலோ தாங்களே காரணம் என்றும்
கொடுமைக்கு ஆளான குழந்தைகள் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட
எண்ணங்களால்,
தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை பற்றி பெற்றோருக்கும்
நண்பர்களுக்கும் தெரியவந்தால் அவர்கள் தங்களிடம் அன்பு செலுத்துவதை
நிறுத்திவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். நடந்ததைச் சொல்வதின்
மூலம் தங்கள் அன்புக்குரியவர்களிடம் இருந்து பிரிந்துவிடுவோமோ
என்றும் அவர்கள் பயப்படுகிறார்கள்.
அவமானம் மற்றும் குற்றஉணர்ச்சி பற்றிய அச்சம்
பெரியவர்களோடு தங்களுக்குள்ள பாலியல் அனுபவங்கள் தவறானது என்பதைக்
குழந்தைகள் அறிந்திருக்கவும் உணரவும் செய்கிறார்கள். இதனால்
நடந்தவற்றை ஒருவரிடம் சொல்லி ஒப்புக்கொள்வதை அவமானம் ஏற்படுத்தும்
ஒரு செயலாகக் கருதுகிறார்கள். வயதில் சிறிய குழந்தைகளைவிட வயதில்
மூத்த குழந்தைகள் அதிகமான அளவில் குற்ற உணர்ச்சியால்
தவிக்கிறார்கள்.
தான் சொல்வது நம்பப்படாது என்ற அச்சம்
தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையைப் பற்றி வெளியே கூறினால் தங்களை
யாரும் நம்ப மாட்டார்களோ என்ற பயம் குழந்தைகளுக்கு உள்ளது. இதனால்,
ஆதரவற்று தனித்துவிடப்பட்ட எண்ணத்தில் தவிக்கின்றனர். மேலும்,
நம்மில் பலர் குழந்தைகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையைப்
பற்றிக் கூறும்போது அதைப் பொய் என்றும் கட்டுக்கதை என்றும்
எண்ணுகிறோம். மாறாக,
கொடுமை பற்றிக் கூறும் போது குழந்தைகள் எப்பொழுதும் உண்மையை
மட்டும்தான் பேசுகிறார்கள் என்பது தான் உண்மையாகும்
தாம் குற்றம் சாட்டப்படுவோமோ என்ற அச்சம்
பாலியல் தொடுதலை எந்த வகையிலோ தாங்கள் எதிர்ப்பார்த்துக்
காத்திருந்தோம்,
அது நிகழத் தாங்கள் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்படுவோம்
என்று குழந்தைகள் அஞ்சுகிறார்கள். மேலும்,
மக்கள் குழந்தைகளைவிடப் பெரியவர்களையே அதிகம் நம்புகிறார்கள்.
கொடுமையிழைப்பவர்களும் குழந்தைகள் தான் தங்களைப் பாலியல் ரீதியாகத்
தொடச் சொன்னார்கள் என்று கூறித் தப்பித்து விடுகிறார்கள்.
குழந்தைகள் தங்கள் உரிமையான அன்பையும் அரவணைப்பையும் மட்டுமே
கேட்கிறார்கள், மாறாக பாலியல் உறவை அல்ல. ஏனெனில்,
அதற்கான ஒப்புதலைத் தர அவர்களுக்கு தக்க வயதும் அறிவும் இன்னும்
ஏற்படவில்லை.
மேலும் துன்பம் நேருமோ என்ற அச்சம்
கொடுமையிழைப்பவர்கள் கொடுமைக்குள்ளாகும் குழந்தைகளை அடக்கி
ஆள்வதற்கு அவர்களது குடும்பத்தினருக்குத் தீங்கு இழைத்து
விடுவதாகக் கூறும் அச்சுறுத்தலை - ஒரு கருவியாகப்
பயன்படுத்துகிறார்கள். இதன் பிறகு,
கொடுமைக்கு ஆளானவர்கள் நடந்தவற்றை வெளியே கூறாமல் இருப்பதன்மூலம்
நமது குடும்பத்தினரைப் பாதுகாக்கும் பாரத்தையும் சேர்த்துத்
தாங்களே சுமக்கிறார்கள்.
தனிப்பட்ட உறுப்புகளையும் தங்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையையும்
விவரிக்கச் சரியான சொற்கள் பற்றி அறிவு இல்லாததும் கூட இந்தக்
குழந்தைகள் மௌனமாக இருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஆகும்.
தனிப்பட்ட உறுப்புகளைக் குறிக்கும் சரியான சொற்களை அவர்களுக்கு
நாம் கற்றுக் கொடுப்பதில்லை. நல்ல குழந்தைகள் தனிப்பட்ட
உறுப்புகளையோ பாலியல் நடவடிக்கைகளையோ குறிக்கும் சொற்களைப்
பயன்படுத்துவதில்லை, பயன்படுத்தக்கூடாது
என்றும் நாம் அவர்களிடம் கூறுகிறோம். |
|
|
|
எப்படிப்பட்ட மனிதர்கள் குழந்தைகளுக்குப் பாலியல் கொடுமையை
இழைப்பார்கள்?
எவர் வேண்டுமானாலும் குழந்தைகளுக்குப் பாலியல் கொடுமை இழைக்கலாம்.
தந்தை,
தாய்,
சகோதரர்,
சகோதரி,
மாற்றாந்தாய் அல்லது,
தாத்தா,
பாட்டி,
மாமா,
அத்தை,
சித்தி,
சித்தப்பா,
பெரியப்பா போன்றோரின் பிள்ளைகள்,
அண்டைவீட்டார்,
குழந்தைகளைக் கவனித்துக்கொள்பவர்கள்,
சமயத் தலைவர்கள்,
ஆசிரியர்கள்,
விளையாட்டுப் பயிற்சியாளர் என்று குழந்தைகளோடு தொடர்புள்ள எவர்
வேண்டுமானாலும் இதில்
ஈடுபடலாம்
கொடுமை இழைப்பவர்கள் பெரும்பாலும் ஆண்கள்தான் என்றாலும்,
சிறிய அளவில் பெண்களும் கொடுமை இழைக்கும் செயல்களில்
ஈடுபடுகிறார்கள்.
கொடுமை இழைப்பவர்களில்
30-50
சதவீதத்தினர் பாலியல் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில் இளவயதிலேயே
ஈடுபடுவதாக
ஆய்வுகள் தெரிவிப்பதை இந்த வேளையில் நாம் தெரிந்துகொள்வது அவசியம்
(இன்னும்....) |
|
|
கொடுமை இழைப்பவர்கள் அதுபோன்ற செயல்களில்
ஈடுபவதைத்
தடுத்து நிறுத்த முடியுமா?
சிறப்பு நடவடிக்கை பயிற்சித் திட்டங்களில்
ஈடுபடுவதன்
மூலம் குழந்தை பாலியல் குற்றவாளிகள் கொடுமையிழைக்கும்
நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்வார்கள்.
கொடுமையிழைப்பவர்கள் தங்களுடைய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றுக்
கொள்வதுதான் இந்தத் திட்டங்களின் முக்கியமான அம்சமாகும். வளர்ந்த
நாடுகளில் இந்தத் திட்டங்கள் குற்றவியல் நீதிமுறையின் முக்கிய
அங்கமாக உள்ளன. இதற்கான முயற்சிகள் இந்தியாவில் இன்னும் துவக்க
நிலையில்தான் உள்ளது. |
|
|
|
கொடுமையிழைப்பவர்களை நமக்கு அடையாளம்
காட்டக்கூடிய முறையற்ற நடவடிக்கைகள் என்னென்ன? |
எவரேனும் ஒரு குழந்தையோடு விளையாடுவதைப் பார்த்து
அசௌகரியமாக உணர்ந்திருக்கிறீர்களா?
நான் அளவுக்கு அதிகமாக சந்தேகப்படுகிறேனோ;
அல்லது
அவர்
நிஜமாகவே அப்படிப்பட்டவராக இருக்கமாட்டார்,
என்று உங்களுக்கு நீங்களே சமாதானம் கூறிக்கொண்டீர்களா?
அப்படி என்றால்.......... நடவடிக்கையைப்
புறக்கணிக்கவேண்டாம்;
நீங்கள் கண்ட காட்சியைப் பற்றி மேலும் கேள்விகள் கேட்பது
எப்படி என்று கற்றுக் கொள்ளுங்கள்.
|
|
|
|
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பெரியவர்கள்
அல்லது பெரிய குழந்தைகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
|
v
அளவுக்கு மீறி ஒரு குழந்தையிடம் கவனம் செலுத்துகிறார்களா
v
குழந்தைக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அதை இறுக அணைப்பது,
தொடுவது,
முத்தமிடுவது,
கிச்சுகிச்சு மூட்டுவது,
மல்யுத்தம் செய்வது அல்லது சும்மாவேனும் தூக்கி வைத்துக்
கொள்வது போன்ற செயல்களை வற்புறுத்திச் செய்கிறார்களா?
v
ஒரு குறிப்பிட்ட குழந்தையின் பாலியல் வளர்ச்சியில் அளவுக்கு
அதிகமாக கவனம் செலுத்துகிறார்களா (எ.கா. குழந்தையின் உடல்
வளர்ச்சியைப் பற்றி திரும்பத் திரும்பப் பேசுவது).
v
குழந்தையுடன் தனிமையில் இருக்கவோ அதிக நேரம் செலவிடவோ
ஏற்றவாறு சூழ்நிலையைத் அடிக்கடி தந்திரமாக
உருவாக்குகிறார்களா?
v
ஓய்வு நேரத்தைத் தன் வயதொத்த நண்பர்களுடன் செலவிடாமல்
குழந்தைகளுடன் மட்டுமே கழிகிறார்களா.
v
எந்த விதமான வெளிப்படையான காரணமும் இல்லாமல் குழந்தைகளுக்கு
விலையுயர்ந்த பரிசுப்பொருட்களை வாங்கிக் கொடுப்பது அல்லது காசு
தருவது இவற்றைச் செய்கிறார்களா
v
அடிக்கடி அல்லது எப்போதும் குழந்தையின் தனிமையை மதிக்காமல்
நடந்துகொள்கிறார்களா?. எடுத்துக்காட்டாக,
குழந்தை குளிக்கும்போது குளியலறைக்குள் அத்துமீறி நுழைவது
போன்ற செயல்களில்
ஈடுபடுகிறார்களா?
v
குழந்தை கட்டுப்பாடின்றி ஒழுங்கு தவறி நடக்கும் சமயங்களில்
எல்லாம் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடு கிறார்களா?
|
|
|
பாலியல் குற்றமிழைப்பவர்களிடம் இருந்து நம்
குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி?
சுயபாதுகாப்பைப் பற்றிக் குழந்தைகளுக்கு நாம் கற்றுதர வேண்டும்.
பெரியவர்களாகிய நாமும் பாலியல் கொடுமையைப் பற்றியும் பாலியல்
கொடுமை நடந்து வருவதைச் சுட்டிக்காட்டும் எச்சரிக்கைச் சின்னங்கள்
மற்றும் அபாயக் கூறுகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்களுக்குத் தெரிந்த ஒரு குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாகாமல்
இருக்க நீங்கள் செய்யக்கூடியது என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பெரியவர்கள் செய்ய வேண்டியது :
v
குழந்தைகளுக்குத் தங்கள் உணர்வுகளை மதிக்கவும் தாம் விரும்பாத
செய்கைகளை வேண்டாம் என்று மறுக்கவும் கற்றுத் தாருங்கள். ஒரு நபர்
குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவராகவும்,
அவர்களை அன்பாகக் கவனித்துக் கொள்பவராகவும் இருந்தாலும் கூட
பிடிக்காத செயல்களை அவர் செய்தால்,
வேண்டாம் என்று கூறுவது சரியே என்று கற்றுத் தாருங்கள்.
v
குடும்பத்தில் சில வரையறைகளை நிர்ணயித்து அதை மதித்து நடக்கப்
பழகுங்கள்.
v
எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டாலோ, அல்லது கேள்விப்பட்டாலோ
உடனடியாகச் செயல்படுங்கள்.
v
கடினமான விஷயங்களான பாலியல் கொடுமை,
தனிப்பட்ட உடல் உறுப்புகளைக் குறிக்கும் சொற்கள் போன்றவற்றைப்
பற்றிக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதற்கு முன்னர் அவற்றைப்
பற்றி விரிவாகப் பேசுவதற்கு உங்களை நீங்களே தயார்ப்படுத்திக்
கொள்ளுதல் அவசியம்.
v
பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் இவை
இரண்டுக்கும் இடையில்
உள்ள வேறுபாடுகளைப் பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
இந்தத் தொடுதல்களை இரகசியமாக வைத்துக்கொள்வது சரியல்ல என்றும்
சொல்லுங்கள். குழந்தைக்கு நெருக்கமானவர்களும் நன்கு
அறிமுகமானவர்களும் கூட அவர்களுக்கு வேதனையும் தீங்கும்
விளைவிக்கும் செயல்களில்
ஈடுபடலாம்
என்பதையும் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
v
குழந்தைகளின் கருத்துக்களையும் உணர்வுகளையும் பற்றிக் கவனித்துக்
கேளுங்கள்,
அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள்,
மதியுங்கள். அது அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் சுய மதிப்பையும்
ஊட்டும்.
v
குழந்தை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய பாதுகாப்புத்
திட்டம் ஒன்றை குழந்தையுடன் சேர்ந்து ஆலோசனை செய்து வகுத்துக்
கொள்ளுங்கள்.
v
ஆபத்து நேர்ந்தால் ஆலோசனை மற்றும்
உதவி,
தகவல் பெறுவதற்கு நீங்களும் உங்கள் குழந்தையும் யாரிடம் பேசலாம்
என்று பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். |
|
|
ஒரு குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளது
என்பது எனக்குத் தெரியவந்தால் நான் என்ன செய்யவேண்டும்? எப்படிச்
செயலாற்ற வேண்டும்? என்ன சொல்ல வேண்டும்?
தனக்கு பாலியல் கொடுமை இழைக்கப்பட்டதைப் பற்றி ஒரு குழந்தை
உங்களிடம் கூறும்போது அதிர்ச்சி,
அவநம்பிக்கை,
மறுப்பு,
கோபம்,
குழப்பம்,
தயக்கம்,
தன்னைத் தானே குறைகூறிக் கொள்ளுதல் போன்ற உணர்ச்சிகளால் நீங்கள்
தாக்கப்படுவது இயல்பு தான். பின்வரும் வழிமுறைகளும் குறிப்புகளும்
நீங்கள் அந்த நிகழ்வை சரியான முறையில் கையாள உதவும்.
குழந்தையை நம்புங்கள்
: பாலியல் கொடுமையைப் பற்றிக் குழந்தைகள் ஒருபோதும்
இட்டுக்கட்டிப் பேசுவதில்லை. கொடுமையால் ஏற்பட்ட துன்பத்தைக்
களைவதில் அந்தக் குழந்தையை நம்புவதுதான் பிரதானமான முதல்கட்டம்.
நடந்தவற்றுக்கு குழந்தை எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்று
குழந்தையிடம் எடுத்து கூறவும்.
அமைதியாக இருங்கள்
: குழந்தைகள் உங்கள் உணர்வுகளை எளிதில் புரிந்துகொள்ளும்
நுட்பத்தைப் பெற்றிருக்கிறார்கள். உங்கள் உணர்வுகளால் அவர்கள்
துன்பமடைகிறார்கள். இந்தப் பிரச்சினையை நீங்கள் கோபத்தோடு
அணுகினால் நீங்கள்,
தன் மீது தான் கோபம் கொண்டுள்ளதாகக் குழந்தை எண்ணக்கூடும்.
கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதால் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து
எந்த விதத்திலும் வேறுபட்டிருக்கவில்லை என்று குழந்தைகளுக்குப்
புரியவைக்கவேண்டும். நீங்கள் அமைதியாக இருந்தால் குழந்தையும்
எப்போதும் போல சாதாரணமாக இருப்பதாகவே எண்ணும்.
குழந்தையின் உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
: குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அனுமதிக்கவேண்டும்.
அந்த உணர்ச்சிகள் உண்மையாவை என்று ஏற்றுக்கொள்ளுதல் அவசியம்.
இதுதான்
வெளியே
சொல்லுதல் மற்றும் குணப்படுத்துதல் என்ற செயல்முறை தொடர்ந்து
நடப்பதற்கு வழிவகுக்கும்.
அடுத்த என்ன நடக்கப்போகிறது என்பதை குழந்தையிடம்
விளக்கிக்
கூறுங்கள்
: கொடுமைக்கு ஆளாகப்பட்ட குழந்தைகளுக்கு வேறு வழிகளோ
அல்லது அந்தப் பிரச்சினையை எப்படிக் கையாள்வது என்பதோ
தெரிந்திருப்பதில்லை. பாலியல் கொடுமையைச் சமாளிக்க மற்றவர்களுடைய
உதவியும் பங்கும் தேவை என்பதை அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும்.
எனினும்,
அந்தச் செயல்திட்டத்தில் குழந்தைகளும் பங்குகொள்வதாக அவர்கள்
உணர்வது அவசியம்.
குழந்தைக்கு ஆதரவு தாருங்கள்
: பாலியல் கொடுமைக்கு ஆளான குழந்தைகள் தாங்கள் தனியாக இருப்பது
போலவும் வேறு எவருக்கும் இதுபோன்ற கொடுமை நடந்ததே
இல்லை என்றும் எண்ணுகிறார்கள். மேலும்,
தாங்கள் சொல்வதை யாரும் நம்பமாட்டார்கள் என்றும் அவர்கள்
நினைப்பதால் பெரியவர்களின் உறுதியான நேர்மறையான ஆதரவு அவர்களுக்கு
.
நிறையத்.
தேவைப்படுகிறது
|
|
|
பாலியல் கொடுமையிலிருந்து குணம்பெறுவது சாத்தியமா?
ஆம்,
பாலியல் கொடுமையிலிருந்து நிச்சயம் குணம் பெறமுடியும். பாலியல்
கொடுமையின் தாக்கம் குழந்தைக்குக் குழந்தை வேறுபடுகிறது. தக்க
சமயத்தில் எடுக்கப்படும் சரியான முயற்சி குழந்தை மீண்டும் ஒரு நல்ல
வாழ்க்கை வாழ வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்தச்
செயல்முறையானது ஒவ்வொரு குழந்தையின் ஆற்றல்,
பலம்,
மீட்சித்தன்மை இவற்றோடு எந்த நிலைமையையும் சமாளித்து
வெற்றிபெறக்கூடிய மனித ஆத்மாவின் இயல்பான திறனையும் ஒருங்கிணைத்து
வகுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். |
|
|
|