About Us
Child Sexual Abuse
Services & Programs
Resources
FAQ
Downloads
Links
Contact Us

கட்டுக்கதையும் உண்மையும்

             

கட்டுக்கதை : மிகவும் அரிதாகத் தான் இந்தியக் குழந்தைகள் கொடுமைக்கு உள்ளாகிறார்கள். ஏனெனில், இந்தியாவின் சமூக-கலாசார அமைப்பு அதன் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாவதை இயல்பாகவே அனுமதிப்பதில்லை.

உண்மை : ஆய்வு மற்றும் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் கிடைத்துள்ள புள்ளிவிவரத் தகவல்கள் (கொடுமைக்கு ஆளான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கூறியது) குழந்தை பாலியல் கொடுமை  நம் நாட்டில் மிகவும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பாதிக்கும் ஒரு பரவலான பிரச்சினை என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது.


கட்டுக்கதை: குழந்தை பாலியல் கொடுமை ஏழை மற்றும் கல்வி அறிவு இல்லாத குடும்பங்களில் தான் பெரும்பாலும் நடக்கிறது.

உண்மை : குழந்தை பாலியல் கொடுமை சமூகத்தின் எல்லா சமூக-பொருளாதாரப் பிரிவுகளிலும் நடக்கிறது.


கட்டுக்கதை: பாலியல் கொடுமை பொதுவாகக் குழந்தைக்கு பரிச்சயமில்லாத சூழலில் நடைபெறுகிறது.

உண்மை : பெரும்பான்மைக் குழந்தைகள் தங்கள் வீடுகளிலேயேதான் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்கள். மிக அதிக எண்ணிக்கையிலான நிகழ்வுகளில், பாலியல் குற்றவாளிகள் குழந்தைகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்றவர்களாகவும் எளிதில் வீட்டுக்குள் செல்லும் உரிமையைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.


கட்டுக்கதை: பெண் குழந்தைகள் மட்டுமே பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்கள்.

உண்மை : ஆண், பெண் குழந்தைகள் - இரு பாலருமே கொடுமைக்கு ஆளாகிறார்கள்.


கட்டுக்கதை: கொடுமை இழைப்பவர்கள் உடல் குறைபாடுள்ள குழந்தைகளை அழகற்றவர்களாக நினைப்பதாலும், அவர்களுக்காகப் பரிதாப்படுவதாலும் அவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதில்லை.

உண்மை : எல்லாக் குழந்தைகளும் எளிதில் பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. உண்மையில் உடல் திறன் குறைபாடுகளைக் கொண்டுள்ள குழந்தைகள் இந்த காரணத்தால் அதிக அளவுக்குப் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.


கட்டுக்கதை: பாலியல் கொடுமை பற்றிக் குழந்தைகள் பொய் சொல்கிறார்கள் அல்லது கற்பனை செய்து கூறுகிறார்கள்.

உண்மை : குழந்தைகள் ஒரு போதும் பாலியல் கொடுமைக்கு ஆளானதைப் பற்றிப் பொய்யோ கற்பனைக் கதையையோ கூறுவதில்லை மௌனமாக இருக்க வேண்டும் கௌரவம், மரியாதை இவற்றைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்பது போன்ற திரிக்கப்பட்ட கருத்துகளின் நிர்ப்பந்தம் அளவில்லாதது. மேலும், நம் சமூகத்தில் உள்ள குழந்தைகளுக்கு நாம் பாலியல்  தகவல்கள் மற்றும்  கொடுமைக்கு ஆளாகக் கூடிய சாத்தியக்கூறுகள் இவற்றைப் பற்றி ஏதும் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த இரண்டு காரணங்களும் பாலியல் கொடுமை நிகழ்ந்தது பற்றிக் குழந்தைகள் பொய் சொல்வதில்லை என்பதை உறுதி செய்கிறது.


கட்டுக்கதை: வயதுக்கு மீறிய மதிநுட்பம் கொண்ட குழந்தைகள் தம்முடைய கவர்ந்திழுக்கும் நடத்தையால் பாலியல் கொடுமையைத் தூண்டுகிறார்கள்.

உண்மை : குழந்தைகள் ஒரு போதும் பாலியல் கொடுமையை ஆரம்பித்துவைப்பது இல்லை. ஒரு குழந்தையின் நடத்தையை கவர்ந்திழுக்கும் தன்மையுடையது என்று பெயரிட்டு அழைப்பது முழுக்க முழுக்கப் பெரியவர்களின் நியாயம் கற்பிக்கும் செயல், கற்பனை மற்றும் தவறான விளக்கம் கொடுக்கும் செயலே ஆகும்.


கட்டுக்கதை: குழந்தைகள் பெரும்பாலும் முன்பின் தெரியாதவர்களால் கொடுமைக்கு ஆளாகிறார்கள்.

உண்மை : கொடுமை இழைப்பவர்களில் பெரும்பான்மையினர் குழந்தைக்குத் தெரிந்தவர்கள் குழந்தையின் நம்பிக்கையைப் பெற்றவர்களாகவும் அதிகாரம் செலுத்தும் தகுதியுடையவர்களாகவும் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டு : குடும்பத்தினர், உறவினர், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர், ஆசிரியர் போன்றவர்கள்.


கட்டுக்கதை: பாலியல் கொடுமை இழைப்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மனநோயாளிகள்.

உண்மை : கொடுமை இழைப்பவர்கள் மிக அரிதாகவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மாறாக, அவர்கள் வழக்கமான வாழ்க்கை நடத்தும் சாதாரண மனிதர்கள் தான்.


கட்டுக்கதை: பெண்கள் குழந்தை பாலியல் கொடுமை இழைப்பதில்லை.

உண்மை : பெரும்பான்மையான கொடுமை இழைப்பவர்கள் ஆண்களாக இருந்தாலும், ஒரு சிறிய எண்ணிக்கையில், பெண்களும் குழந்தைகளுக்குப் பாலியல் கொடுமை இழைக்கிறார்கள்.


கட்டுக்கதை: பெரும்பாலும் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்குக் குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாவது தெரிந்திருக்கும்.

உண்மை : பெரும்பாலும், யாருக்கும் குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாவது தெரிவதில்லை.


கட்டுக்கதை: கொடுமையை மறக்கச் சொல்லிக் குழந்தையைத் தூண்டவேண்டும். ஏனெனில், குழந்தையின் மீது, பாலியல் கொடுமை எந்த தீய விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

உண்மை : குழந்தை பாலியல் கொடுமை குழந்தையின் மீது பல தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. நடத்தை, மனநிலை, உடலியல் மற்றும் மற்றவர்களோடு பழகுவதில் பிரச்சினைகளை உருவாக்குகிறது.


கட்டுக்கதை: குழந்தை பாலியல் கொடுமையைப் பற்றி வெளியே சொல்வது நன்மையைக்  காட்டிலும் தீய விளைவுகளையே ஏற்படுத்தும்.

உண்மை : குழந்தை பாலியல் கொடுமையைப் பற்றி வெளியே தெரிவிக்காவிட்டால் அதே கொடுமை இழைப்பவர் மற்ற குழந்தைகளுக்கும் ஆபத்து விளைவிக்கலாம். அல்லது மீண்டும் அதே குழந்தையைக் குறிவைக்கலாம்.


கட்டுக்கதை: கொடுமை இழைக்கும்  செயல் பெரும்பாலும் தனிப்பட்ட ஒரு முறை மட்டுமே நிகழும் செயல் ஆகும்.

உண்மை : கொடுமை இழைப்பவரின் நடத்தையில் ஒரு ஒழுங்கு முறையும் அமைப்பும் காணப்படுகிறது. அவர்கள் அதை மீண்டும் மீண்டும் நிகழச் செய்கிறார்கள். பல குழந்தைகளுக்குக் கொடுமை இழைக்கிறார்கள்.


கட்டுக்கதை: டீன்-ஏஜ் பருவத்தினர் மட்டுமே கொடுமைக்கு ஆளாகிறார்கள்.

உண்மை : எந்த வயதுக் குழந்தையும் கொடுமைக்கு ஆளாகலாம். பச்சிளம் குழந்தைகள் கூட பாலியல் கொடுமைக்கு ஆளானதைத் தெரிவிக்கப்பட்ட சம்பவங்கள் காட்டுகின்றன.